14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

⋅வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்